மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைப்பு!

மருத்துவ கல்வி மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு, மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் மருத்துவ படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு அடுத்தாண்டு முதல் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் எனப்படும் நெக்ஸ்ட் தேர்வு நடத்த…

மருத்துவ கல்வி மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு, மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ் மருத்துவ படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு அடுத்தாண்டு முதல் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் எனப்படும் நெக்ஸ்ட் தேர்வு நடத்த தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டு இருந்தது. இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நெக்ஸ்ட் தேர்வுக்கு பல்வேறு மாநில அரசுகள், மருத்துவ சங்கங்கள், மருத்துவ மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 11ம் தேதியன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கிய அறிவுறுத்தலை ஏற்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து மறு உத்தரவு வரும் வரை நெக்ஸ்ட் தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.