நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக அருப்புக்கோட்டை – தூத்துக்குடி இடையேயான ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அருப்புக்கோட்டை- தூத்துக்குடி இடையேயான ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில், மொத்தம் உள்ள 143 கிலோ மீட்டர் தூரத்தில் இது வரை 14 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டும் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 129 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணிகள் முடங்கின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில் அதன் எதிரொலியாக தற்போது இந்த திட்டத்திற்கு 114 கோடி ரூபாய் நிதிஒதுக்கிடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார் என்பதும், அதில் ரயில்வே துறைக்கு ரூ.2.41 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.