நியூஸ்7 தமிழ் எதிரொலி – செங்கம் நகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விளம்பர டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர டிஜிட்டல் பேனர்கள் நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி விளம்பர…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர டிஜிட்டல் பேனர்கள் நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி விளம்பர
டிஜிட்டல் பேனர்கள் செங்கம் பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெறாமல்
நெடு நாட்களாக வைக்கப்பட்டு இருந்தது.  இந்த விளம்பர பேனர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததுடன்,  மழைக்காலங்களில் பொதுமக்கள் மேல் விழும் நிலை இருப்பதை சுட்டிக்காட்டி நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து, செங்கம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக செங்கம் நகர் பகுதியில் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரி விளம்பர டிஜிட்டல் பேனர்களை உடனடியாக அகற்றியது.
இதனையடுத்து செய்தி வெளியிட்ட நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு அப்பகுதி
சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நன்றி தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.