நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: ஜவுளி நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் உறுதிமொழியேற்பு!

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி, மார்ச் மாதம் முழுவதும், நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை, நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்கள் பாலின சமத்துவ…

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி, மார்ச் மாதம் முழுவதும், நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை, நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும், தனியார் நிறுவங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகக் கல்லூரியில் பாலின சமத்துவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கல்லூரிப் பேராசிரியர்கள் உள்பட 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாலின சமத்துவ உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். அதையடுத்து, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அரசை வலியுறுத்தும் இயக்கத்திலும் 800க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வத்தோடு கலந்துகொண்டு கையெழுத்திட்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் இடைகால் ஸ்டக் ஹைடெக் சிபிஎஸ்சி பள்ளியில் நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஆசிரியைகள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்று, அதன் பின்னர் நடைபெற்ற மாதவிடாய் கையெழுத்து இயக்கத்திலும் பங்கேற்று கையெழுத்திட்டனர்.

பாலின சமத்துவ விழிப்புணர்வு இயக்க நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள அமிர்த வித்யாலயம் சிபிஎஸ்சி பள்ளியில் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஆசிரியைகள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாலின சமத்துவ உறுதிமொழியை ஏற்றனர். இதையடுத்து, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அரசை வலியுறுத்தும் இயக்கத்திலும் மாணவிகள் ஆர்வத்தோடு கலந்துகொண்டு கையெழுத்திட்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

கரூர் மாவட்டம் அய்யர்மலை மவுண்ட் கிரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பாலின சமத்துவ விழிப்புணர்வு இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஆசிரியைகள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து, நடைபெற்ற மாதவிடாய்க் இயக்கத்திலும் மாணவிகள் ஆர்வத்தோடு கலந்துகொண்டு கையெழுத்திட்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி குயின்ஸ் மகளிர் தையல் பயிற்சி நிலையத்தில் நியூஸ் 7 முன்னெடுத்துள்ள நிகரென கொள் பாலின சமத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பெண்கள் பாலின சமத்துவ உறுதிமொழி எடுத்துக்கொண்டதோடு, மாதவிடாய்க் இயக்கத்திலும் கலந்துகொண்டு ஆர்வமுடன் கையொப்பமிட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், கோவில்பட்டி EMAR ஜவுளிக்கடையில் நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள நிகரென கொள் பாலின சமத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் நடைபெற்ற மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அரசை வலியுறுத்தும் இயக்கத்திலும் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டு கையெழுத்திட்டு தங்கள் ஆதரவையும் தெரிவித்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.