பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நியூஸ் 7 தமிழ் சார்பில் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கம் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வரிசையில் சென்னை, மயிலாடுதுறை, தென்காசி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் ஆர்வத்தோடு பாலின சமத்துவ உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சென்னை, அம்பத்தூரில் உள்ள சேதுபாஸ்கரா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர். அதைத் தொடர்ந்து, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அரசை வலியுறுத்தி நடைபெற்ற இயக்கத்திற்கு, ஆதரவு தெரிவித்து ஆசிரியைகள், மாணவிகள் அனைவரும் கையெழுத்திட்டனர்.
அதேபோல், சென்னை, நுங்கம்பாக்கம் அசெம்ப்ஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர். அதைத் தொடர்ந்து, மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க வலியுறுத்தி நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள கையெழுத்து இயக்கத்தில் மாணவ, மாணவிகள் கையொப்பமிட்டனர்.
இதேபோல், மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனக் கலைக் கல்லூரியில் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் உள்பட மாணவர்கள் அனைவரும் பாலின சமத்துவ உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதைத் தொடர்ந்து, மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க வலியுறுத்தி நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள கையெழுத்து இயக்கத்தில் மாணவ, மாணவிகள் கையொப்பமிட்டனர். அதைத் தொடர்ந்து, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அரசை வலியுறுத்தி நடைபெற்ற இயக்கத்திற்கு, ஆதரவு தெரிவித்து பேராசிரியைகள், பெண் பணியாளர்கள், மாணவிகள் அனைவரும் கையெழுத்திட்டனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் ஜூலியானா டெய்சி மேரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதைத் தொடர்ந்து மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் ஆசிரியைகள், மாணவிகள் கையெழுத்து இட்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள. மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை கணேசர் செந்தமிழ் கலை, அறிவியல் கல்லூரியில். பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் பழனியப்பன் பாலின சமத்துவ உறுதிமொழிகளை வாசிக்க, பேராசிரியர்களும் மாணவர்களும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அரசை வலியுறுத்தி நடைபெற்ற இயக்கத்திற்கு, ஆதரவு தெரிவித்து பேராசிரியைகள், பெண் பணியாளர்கள், மாணவிகள் அனைவரும் கையெழுத்திட்டனர்.
இதேபோல், கன்னியாகுமரி சி.எஸ்.ஐ மெடிக்கல் மிஷன் நெய்யர் மருத்துவமனையில் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டக் குழந்தைகள் நலப் பாதுகாப்புப் பிரிவு அலுவலர் ஷாலினி கலந்து கொண்டு பாலினம் குறித்து எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட மருத்துப் பிரிவு மாணவர்கள் ஆயிரம்பேர் பாலின சமத்துவ உறுதிமொழி எடுத்தனர்.அதையடுத்து, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அரசை வலியுத்தும் இயக்கம் நடைபெற்றது. இதில், செவிலியர் கல்லூரி ஆசிரியைகள், பெண் பணியாளர்கள், மாணவிகள், மருத்துவ மனைப் பெண் பணியாளர்கள் ஆகியோர் கையெழுத்திட்டு ஆதரவு அளித்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா












