பாலின சமத்துவத்தை வலியுறுத்தி, நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை, நியூஸ் 7 தமிழ், முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆரணி பாரதி வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 700 பேர் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள பாரதி வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் ஜான் ரிச்சா தலைமையில், ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்களும் 700 மாணவர்களும் பாலின சமத்துவ உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். அதையடுத்து நடைபெற்ற மாதவிடாய் இயக்கத்திற்கும் மாணவிகள் கையெழுத்திட்டு ஆதரவு அளித்தனர். மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அரசை வலியுறுத்தி நடைபெற்ற இந்த இயக்கத்துக்கு மாணவிகள் வரவேற்பு தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வித்யா நிகேதன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர்களும், 500க்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்துகொண்டு பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.அதைத் தொடர்ந்து, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அரசை வலியுறுத்தும் இயக்கத்தில் ஆசிரியைகளும், பெண் பணியாளர்களும், மாணவிகளும் உற்சாகத்தோடு கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர்.
திருச்செங்கோடு மாணிக்கம் பாளையம் பாரத் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 300க்கும் மேற்பட்ட ஆசியர்களும், மாணவர்களும் கலந்துகொண்டு பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.அதைத் தொடர்ந்து, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அரசை வலியுறுத்தும் இயக்கத்தில் ஆசிரியைகளும், பெண் பணியாளர்களும், மாணவிகளும் உற்சாகத்தோடு கையெழுத்திட்டனர்.
மதுரை உசிலம்பட்டி பொன்மணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட ஆசியர்களும், மாணவர்களும் கலந்துகொண்டு பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர். அதைத் தொடர்ந்து, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அரசை வலியுறுத்தும் இயக்கத்தில் ஆசிரியைகளும், பெண் பணியாளர்களும், மாணவிகளும் உற்சாகத்தோடு கையெழுத்திட்டு வரவேற்பு தெரிவித்தனர்.
தென்காசியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரவிச்சந்திரன் முன்னிலையில், அலுவலக அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அரசை வலியுறுத்தும் இயக்கத்திலும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் சிவபுரத்தில் உள்ள ஜேஜே கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்துகொண்டு பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.
அதைத் தொடர்ந்து, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அரசை வலியுறுத்தும் இயக்கத்தில் ஆசிரியைகளும், பெண் பணியாளர்களும், மாணவிகளும் உற்சாகத்தோடு கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா