இணையத்தில் வைரலாகும் ”சிப்ஸ் ஆம்லெட்” – உணவுப் பிரியர்களுக்கு புதிய அறிமுகம்

ஆம்லெட்டில் பலவகைகள் உண்டு. புதுவகையான சிப்ஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட சிப்ஸ் ஆம்லெட் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஃப்யூஷன் உணவுகள் சமையல் உலகில் ஒரு பிரபலமான ஒன்றாகும். பாரம்பரியமான உணவுகளை விட புதுமையான உணவுகளை உணவுப் பிரியர்கள்…

ஆம்லெட்டில் பலவகைகள் உண்டு. புதுவகையான சிப்ஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட சிப்ஸ் ஆம்லெட் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஃப்யூஷன் உணவுகள் சமையல் உலகில் ஒரு பிரபலமான ஒன்றாகும். பாரம்பரியமான உணவுகளை விட புதுமையான உணவுகளை உணவுப் பிரியர்கள் சாப்பிட்டு பார்க்க வேண்டுமென ஆசைப்படுகிறார்கள். அதனால் தான் சமீபகாலமாக ஃபுட் ப்ளாக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உலகின் எந்த மூலைகளில் தயாரிக்கப்பட்ட உணவாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் மூலம் அவை அதிகமான நபர்களால் பார்க்கப்பட்டு அந்த உணவு தனி கவனம் பெற தொடங்குகிறது. சமையற் கலைஞர்களும் ஒரே விதமான உணவுகள் அல்லது தயாரிப்பு முறைகளில் இருந்து மாறுபட்டு சில புதிய ஐடியாக்களை சேர்த்து உணவின் சுவை மற்றும் கண்கவர் அலங்காரங்களுடன் பரிமாறுகின்றனர்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சிப்ஸ் ஆம்லெட் பிரபலமாகி வருகிறது. ஆம்லெட் பிரியர்களே இல்லாத நகரங்களே இல்லை. அதேபோல ஆம்லெட் வகைகளுக்கு ஒரு எல்லையே இல்லை தினந்தோறும் புதிய புதிய வகைகள் ஆம்லெட்டில் உருவாகின்றன. மிக எளிதாக தயாரிப்பதற்கு ஏற்றவாறு இருப்பதால் ஈவ்னிங் ஸ்னாக்ஸிற்கு இவை ஆம்லெட் பிரியர்களால் அதிகம் விரும்பப்படுகிறது.

இதையும் படியுங்கள் : ரமலான் நோன்பும் இந்திய பாரம்பரிய உணவுகளும்

சிப்ஸ் ஆம்லெட் என்பது முட்டை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்குகிறார். அதன் பின்னர் ஒரு தோசைக் கல்லில் வெண்ணெய் கட்டியை விட்டு சூட்டில் கரைய விடுகிறார். பின்னர் கலக்கி வைத்த முட்டைக் கலவையை அதில் ஊற்றி வேகவைத்து அதன் மேல் லேஸ் மேக்ஸ் எனும் அதீத காரம் உடைய சிப்ஸ் அடுக்கி வைத்து அதனை ஒரு பிரட்டு பிரட்டுகிறார். பார்ப்பதற்கே ரொம்ப யம்மியான சிப்ஸ் ஒரு ஆம்லெட் தயாராகிறது.

இந்த ஆம்லெட் தயாரித்த அதே நபர் தான் ஏற்கனவே ‘சோவ் மெய்ன் ஆம்லெட்’ தயாரிக்கும்  வீடியோ இணையத்தில் வைரலானது. ஒரு தட்டில் சோவ் மெய்ன் நிரப்பி வழக்கமான முட்டைக் கலவையை தயாரித்து முட்டை வெந்ததும் சோவ் மெய்னை அதன் மேல் நிரப்பி ‘சோவ் மெய்ன் ஆம்லெட்’ தயாரித்தார். இது உணவு பிரியர்களிடையே கலவையான விமர்சனங்க்ளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.