கோவையில் நியூஸ் 7 தமிழின் மாபெரும் கல்வி கண்காட்சி – நாளை தொடங்குகிறது!

கோவையில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில், நாளை மற்றும் நாளை மறுநாள் கல்வி கண்காட்சி நடைபெறுகிறது. எந்த கல்லூரியை தேர்வு செய்யலாம், எந்த…

கோவையில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில், நாளை மற்றும் நாளை மறுநாள் கல்வி கண்காட்சி நடைபெறுகிறது.

எந்த கல்லூரியை தேர்வு செய்யலாம், எந்த பாடப்பிரிவினை தேர்வு செய்யலாம் என்பது போன்ற பிளஸ் 2 முடித்த மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்கும் விதமாக, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் கல்வி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

கோவை கொடீசியாவில் பிரமாண்டமாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடைபெற உள்ள இந்த கல்வி கண்காட்சியில் சுமார் 40க்கும் மேற்பட்ட முன்னணி கல்லூரிகள் பங்கேற்கின்றன. மாணவர்கள் கல்வி கடன் பெறுவதற்கு உதவியாக வங்கிகளும் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன. நாளை சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் நாளை தொடங்கி வைக்க உள்ளனர். இந்த கண்காட்சியில், மாணவர்களுக்கு ஸ்பாட் அட்மிஷன் மற்றும் கல்வி உதவி தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வி ஆலோசகர்கள் பங்கேற்று மாணவர்களின் சந்தேகங்களுக்கும் பதிலளிக்க உள்ளனர். இந்த கண்காட்சியில் பங்குபெறும் மாணவர்களில் சிறந்த மதிப்பெண்கள் உள்ள மாணவர்களுக்கு, அவர்களின் உயர் கல்விக்காக, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பிலும் கல்வி உதவி தொகை வழங்கப்பட உள்ளது.

கண்காட்சியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு ஒருமுறை  குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 5 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.