கோயில் விழாவில் பக்தி பாடலுக்கு பரவசத்தோடு நடனமாடிய காவல்துறை அதிகாரி – வைரலாகும் வீடியோ!

கேரள மாநிலம் இடுக்கியில் கோயில் விழாவில் தமிழ் பக்தி பாடலுக்கு பரவசத்தோடு நடனமாடிய காவல்துறை அதிகாரியின் வீடியோ வைரலான நிலையில் தற்காலிக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட…

கேரள மாநிலம் இடுக்கியில் கோயில் விழாவில் தமிழ் பக்தி பாடலுக்கு பரவசத்தோடு
நடனமாடிய காவல்துறை அதிகாரியின் வீடியோ வைரலான நிலையில் தற்காலிக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட சாந்தன்பாறை அருகே உள்ள ஒரு
கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. விழாவில் பாதுகாப்பு
பணிக்காக சாந்தன்பாறை உதவி ஆய்வாளர் ஷாஜி தலைமையிலான போலீசார் சென்று
இருந்தனர்.

விழாவின் போது ஒளிபரப்பப்பட்ட தமிழ் பக்தி பாடலான மாரியம்மா மாரியம்மா பாடலை கேட்ட உதவி ஆய்வாளர் ஷாஜி பரவசமடைந்து சாமியின் முன் நின்று நடனம் ஆடத் தொடங்கினார்.

https://twitter.com/cinnattampi/status/1644295138683015168?s=20

காவல்துறை சீருடையில் காண்போரை கவரும் வகையில் பரவசத்தோடு காவல்துறை அதிகாரி நடனமாடிய காட்சியை அங்கிருந்த பொதுமக்கள் தங்கள்
செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிர்ந்ததை தொடர்ந்து
தற்போது கேரளா முழுவதும் இந்த வீடியோ பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதனிடையே கோவில் திருவிழாவில் கடமையை மறந்த நடனமாடிய உதவி ஆய்வாளர் ஷாஜி மீது ஒழங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக அவர் தற்காலிக பணியிடை நீக்கம்
செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.