நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி-லட்சத்தீவிலிருந்து மதுரைக்கு மாற்றப்பட்ட தேர்வு மையம்!

கல்வி,தொடர்பான பிரச்னைகளுக்கு என்னை எப்போதும் வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம் :மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மதுரை மேலூரை சேர்ந்த மாணவர் லோகேஸ்வர் மத்திய பல்கலைக்கழக நுழைவு தேர்வில் பங்கேற்க லட்சத்தீவில் தேர்வு மையம் அவருக்காக ஒதுக்கீடு…

கல்வி,தொடர்பான பிரச்னைகளுக்கு என்னை எப்போதும் வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம் :மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்

மதுரை மேலூரை சேர்ந்த மாணவர் லோகேஸ்வர் மத்திய பல்கலைக்கழக நுழைவு தேர்வில் பங்கேற்க லட்சத்தீவில் தேர்வு மையம் அவருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முயற்சியாலும், நீயூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாலும் தேர்வு மையம் லட்சத்தீவிலிருந்து மதுரைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து மாணவர் லோகேஸ்வர் மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதி விட்டு தனது குடும்பத்துடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்ததாவது மாணவர்களின் கல்வி சார்ந்த -பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறோம் . மதுரை மாணவர் லோகோஸ்வருக்கு கடும் முயற்சிக்கு பின் 7 மணி நேரத்தில் தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது. மத்திய உயர்க்கல்வித்துறை, தேசிய தேர்வு முகமை, திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் ஆகியோரின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது .

கல்வி,தேர்வு சார்ந்த -பிரச்னைகளுக்கு எப்போதும் வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.பிறகு மத்திய அரசு தேர்வுகள் மண்டலம் வாரியாக தேர்வுகளை நடத்த வேண்டும் ,மாணவர்கள் பேருந்து விபத்துகளில் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு சரியான நேரத்திற்க்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.