நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலி; விரைவில் மேம்பாலம் கட்டப்படும் – ஆர்.டி.சேகர் உறுதி

சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில்நிலைய பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கையின் படி, மழைநீர் தேங்காத வகையில் விரைவில் மேம்பாலம் கட்டப்படும் என பெரம்பூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் தெரிவித்துள்ளார். “தண்ணீர் தேங்கியதற்கு காரணம்…

சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில்நிலைய பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கையின் படி, மழைநீர் தேங்காத வகையில் விரைவில் மேம்பாலம் கட்டப்படும் என பெரம்பூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் தெரிவித்துள்ளார்.

“தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என்ன, தண்ணீர் தேங்காமல் இருக்க தீர்வு என்ன?” என நியூஸ் 7 தமிழ் இன்று தொடர் நேரலை, கள ஆய்வு செய்து செய்திகளை வெளியிட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்று காலை சென்னை வியாசர்பாடி பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்திருந்த நிலையில்,

“மேம்பாலம் கட்டுவதற்காக எனது முயற்சியில் முதல்வர் உத்தரவின்படி 164 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட பணிகளுக்காக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” என பெரம்பூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் உறுதியளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.