கும்பகோணம் அருகே திருக்கருகாவூரில் நடைபெற்ற நியூஸ் 7 தமிழ் பக்தி சேனல்
இரண்டாம் ஆண்டாக நடத்திய மாபெரும் புத்திர காமேஷ்டியாகத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தம்பதியர்கள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
குழந்தை இல்லாத தம்பதியர்கள் இறைவன் அருள் இருந்தால் மட்டுமே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பிக்கை நம் மக்களிடையே உள்ளது. அந்த வகையில் இன்று திருகருகாவூரில் உள்ள சோழன் மழலைகர் பள்ளியில் நியூஸ்7 பக்தி சேனல் மாபெரும் புத்திரகாமஷ்டியாகம் நடத்தியது.
இந்த யாகத்தில் குடும்ப சந்ததிகள் பெருக வேண்டி தம்பதியர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டு அவரவர்கள் நட்சத்திரம் பெயர்களை தெரிவித்து அர்ச்சனை செய்து இறைவனை பிரார்த்தனை செய்தார்கள். இதில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் தம்பதியர்கள் வருகை புரிந்து இறைவனை பிரார்த்தனை செய்து வேண்டி கொண்டனர்.
முன்னதாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாகவேள்விகள்
நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பூரணாகதியும் தீபாரதனையுடன், புத்திர காமஷ்டி
யாகம் நிறைவு பெற்றது, இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக தம்பதியர்களுக்கு
மருத்துவ முகாமும் மருத்துவரிடம் தம்பதியர்கள் ஆலோசனையும் பெற்றார்கள், இதனைத்
தொடர்ந்து யாகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாத பைகளும், அன்னதானமும்
வழங்கப்பட்டது.








