25.5 C
Chennai
November 29, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

வலசை பறவைகளின் வாழிடம் தப்பியது எப்படி ?

வலசைப் பறவைகளின் வாழிடமான நீர்நிலையை அழித்து அமையவிருந்த தமிழ்நாடு பாலிமர் தொழிற்பூங்காவிற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்தது.

வலசை பறவைகள் என்பது ஏதோ ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பறவை மட்டுமல்ல. இயற்கை சமநிலையில் இருந்தால் மட்டுமே அவைகள் வலசைகளாக வருகைத் தரும். அவைகளின் வாழ்விடத்தை மனிதர்கள் அழிக்க முயலும்போது, வலசை பறவைகளின் இனமே குறைந்துவிடும். இதனால் இயற்கை சமநிலையை இழந்துவிடும். பூச்சிகள் பெருகும் போது அவற்றை உண்ணுகிற பறவைகள் அங்கு வலசை வருகின்றன. சூழலில் தங்களைத் திறம்பட பொருத்திக்கொள்ளவும், அதனை சிதைக்காமல் தன் வாழ்வுக்குரியதை எடுத்துக்கொள்ளவும், தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் ஒவ்வொரு பறவையும் இயற்கையாகவே படைக்கப்பட்டுள்ளன. அப்படி இயற்கையை சமநிலையில் வைக்கும் வலசைபறவைகளுக்கு ஆபத்து நம்ம சென்னை அருகிலும் ஏற்பட்டது. பொது மக்களும், மீனவர்களும் கொந்தளித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் உள்ள புழுதிவாக்கம் மற்றும் வாயலூரில் தமிழ்நாடு அரசின் தொழிழ் வளர்ச்சி நிறுவனம்(TIDCO) மற்றும்  சிறு தொழில் வளர்ச்சிக் கழகம்(SIDCO) நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் தமிழ்நாடு பாலிமர் தொழிற்பூங்கா(Tamilnadu Polymer Industries Park) ஒன்றை 248 புள்ளி 78 ஏக்கர் பரப்பளவில் 217 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்திற்கு கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது.

இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி விண்ணப்பத்தில் பல்வேறு தவறான தகவல்கள் இடம் பெற்றன. திட்ட அமைவிடத்தில் இருந்த நீர்நிலையை அளிக்க சாம்பல் கழிவுகளைக் கொட்டியதாகவும், அங்கீகாரமில்லாத நிறுவனத்தைக் கொண்டு EIA அறிக்கை தயார் செய்த்தாகவும், மாற்று இடங்கள் குறித்து ஆராயாதது உள்ளிட்ட காரணங்களுக்காக இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யக்கோரி எண்ணூர் கழுவெளி பாதுகாப்பு பிரச்சாரக் குழுவைச் சேர்ந்த  சரவணன் என்பவர் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தென் மண்டல பசுமைத் தீர்பாயம், தமிழக அரசு வழங்கிய  சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்வதாகவும்,  திட்ட அமைவிடத்தில் இருந்த நீர்நிலையில் கொட்டப்பட்ட சாம்பல் கழிவுகளை அகற்றி மறுசீரமைப்பு செய்து சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மேற்கொள்ளவும உத்தரவிட்டது.  புதிய ஆய்வு எல்லைகளை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்க வேண்டும் எனவும்  அதனடிப்படையிலேயே இத்திட்டத்திற்கான விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு திட்ட அமைவிடத்தை நேரில் ஆய்வு செய்து விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும் என்றும் இப்பணிகள் அனைத்தையும் ஒன்பது மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy