முக்கியச் செய்திகள் தமிழகம்

உதவி கோரும் மாற்றுத்திறன் கொண்ட புதுமண தம்பதி

காட்டுமன்னார்கோவில் அருகே திருமண உதவித்தொகையை நம்பி ஏமாற்றம் அடைந்த மாற்றுத்திறன் கொண்ட புதுமண தம்பதியர் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வாயிலாக உதவி கோரி வேண்டுகோள் வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமராட்சி கிராமத்தில் வசித்துவரும் குணசேகரன் மகள் ஷர்மிளாவுக்கு (மாற்றுத்திறனாளி) பல வருடங்களாக வரன் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், சேத்தியாதோப்பை சேர்ந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளியான உமாநாத் என்பவருக்குச் சம்பந்தம் பேசியுள்ளனர். ஆனால், பெண்ணின் பெற்றோர் அரசு வழங்கக்கூடிய திருமண தொகை மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை நம்பி திருமணத்தை முடித்து விடலாம் என நம்பி இருந்ததாகவும், இந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டது தற்போதுதான் தெரியவந்ததாகவும், கூறி வேதனை தெரிவிக்கின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: ‘ட்விட்டர்: வீடியோவில் குளோஸ்டு கேப்சன் வசதி!’

இந்நிலையில், திருமண செலவிற்குப் பணம் இல்லாமல் தவித்து வந்தநிலையில், எளிமையாகத் திருமணத்தை முடிக்க நினைத்த அவர்கள், அங்கு உள்ள அம்மன் கோவிலில் ஒருவருக்கொருவர் மாலை மாற்றி திருமண செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளி புதுமண தம்பதியர் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வாயிலாக, தமிழக அரசு ஏதாவது உதவி செய்து வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் எனக் கண்ணீர் மல்க வேண்டுகோள் வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோலியின் முடிவை பிசிசிஐ மதிக்கிறது – கங்குலி

Saravana Kumar

உரிய ஒப்புதல்களை பெறாத தண்ணீர் லாரிகளை, தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது : சென்னை உயர் நீதிமன்றம்

Halley Karthik

கல்யாண சீர்: மருமகனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய மாமனார்

Gayathri Venkatesan