டுவிட்டர் சமூக வலைதளத்தில் சில வரிகளில் தகவல்களை நம்மால் பரிமாறிக் கொள்ள முடியும். புகைப்படங்கள், வீடியோக்களையும் பகிரும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. பிரதமர், அமைச்சர்கள், பிரபலங்கள் என முக்கியமான நபர்கள் டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர்.
இவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் மிக அதிக அளவில் உள்ளது. தங்களது கருத்துகளை பொது வெளியில் பகிர்ந்து கொள்வதற்காகவும், பிரபலங்களை பின்தொடர்வதற்கும் டுவிட்டர் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பல புதிய வசதிகளை அளித்துவரும் டுவிட்டரில் தற்போது பயனர்கள் வீடியோக்களை எளிதாக அணுகுவதற்கு ஏதுவாக குளோஸ்டு கேப்சன்ஸ் என்ற புதிய வசதியை டுவிட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த குளோஸ்டு கேப்சன்ஸ் ஆப்ஷனை வேண்டுமென்றால் ஆன் அல்லது ஆஃப் செய்து கொள்ளலாம்.
இந்த கேப்ஷன் தாமாகவே வீடியோவில் வராது. பயனர்களுக்குத் தேவை என்றால் மட்டுமே அந்த கேப்ஷனை ஆன் செய்து கொள்ளலாம். வீடியோவைப் பார்க்கும்போது இடையூறாக இருக்கும் என்று கருதினால் ஆஃப் செய்து கொள்ளலாம்.
இந்த குளோஸ்டு கேப்சன்ஸ் (CC) ஆப்ஷன்ஸ் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் போன்களில் வரும். CC என்பதன் மீது கிளிக் செய்தால் கேப்சன் வரும். இது காது கேளாத பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பிற சமூக வலைதளங்களிலும் இதுபோன்ற சில ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் டுவிட்டரும் தற்போது தனது பயனர்களுக்காக புதிய வசதியை சேர்த்துள்ளது. இந்தப் புதிய வசதி டுவிட்டர் பயனர்களைப் பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-மணிகண்டன்