முதன்முறையாக மோதும் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா

வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள, டி-20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் முதன்முறையாக மோதுகின்றது. டி-20 உலக கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணி, இங்கிலாந்தை தோற்கடித்தது. இதையடுத்து…

வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள, டி-20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் முதன்முறையாக மோதுகின்றது.

டி-20 உலக கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணி, இங்கிலாந்தை தோற்கடித்தது. இதையடுத்து துபாயில், நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதியது.

இதில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 4 விக்கெட் இழப்புக்கு, 176 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா, துபாயில் வரும் 14-ஆம் தேதி நியூசிலாந்து, அணியுடன் மோதுகிறது. நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் முதன்முறையாக மோதுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.