புத்தாண்டையொட்டி, அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
புத்தாண்டையொட்டி, சென்னை மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதில், வண்ண மலர்களால் ஆன மயில்கள் தோகை விரித்தது போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
அங்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, சக்கரபாணி, சேகர்பாபு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
https://twitter.com/CMOTamilnadu/status/1477195807476617217
தொடர்ந்து திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியும் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், “2022-ஆம் ஆண்டு, ஈராண்டுகளாக நாம் மேற்கொண்டுவரும் கொரோனாவிற்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வந்து, துன்பங்களையும் துயரங்களையும் அகற்றி அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்திடும் ஆண்டாக அமைந்திட என்னுடைய நல்வாழ்த்துகள்.” என அவர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.








