ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு தள்ளி போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022-ல் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆகும். எஸ்எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மற்றும் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்ட பொருட் செலவில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இதற்கு முன் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு மக்களிடையே அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த திரைப்படம் ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினரால் முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாகவும், பல மாநிலங்களில் ஊரடங்குகள் விதிக்கப்படுவதன் காரணமாகவும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







