புதிய காவல் துறை ஆணையரகங்கள்: திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தாம்பரம் மற்றும் ஆவடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய காவல் துறை ஆணையரகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். சட்டப்பேரவையில், கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி மானிய கோரிக்கை அறிவிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாம்பரம்…

தாம்பரம் மற்றும் ஆவடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய காவல் துறை ஆணையரகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

சட்டப்பேரவையில், கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி மானிய கோரிக்கை அறிவிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாம்பரம் மற்றும் ஆவடியில் புதிய காவல் ஆணையரகம் அமைக்கப்படும் அறிவித்திருந்தார்.

தொடர்ந்து, நிர்வாக வசதிக்காக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம், ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் என 3 ஆக பிரித்து அரசாணையும் வெளியிடப்பட்டது.

தாம்பரம் மற்றும் ஆவடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய காவல் துறை ஆணையரகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.