செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்கு புதிய ரயில் சேவை – பயணிகள் மகிழ்ச்சி!

செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்கு புதிய ரயில் சேவை தொடங்கியது. தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து தென்காசி, நெல்லை வழியாக தாம்பரத்திற்கு முதல் புதிய ரயில் சேவை தொடங்கியது. இதை கொண்டாடும் விதமாக பாஜகவினர் மற்றும் திமுகவினர் புதிய…

செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்கு புதிய ரயில் சேவை தொடங்கியது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து தென்காசி, நெல்லை வழியாக தாம்பரத்திற்கு முதல் புதிய ரயில் சேவை தொடங்கியது. இதை கொண்டாடும் விதமாக பாஜகவினர் மற்றும் திமுகவினர் புதிய ரயிலுக்கு மாலை அணிவித்து ரயில் ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.  இதில் சேவையை தொடங்கி வைக்க தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திமுகவை சேர்ந்த தனுஷ், எம். குமார் வருகை தந்நதனர்.

இந்நிலையில் பாஜகவினர் பிரதமர் மோடியை புகழ்ந்து பயங்கர சத்தத்துடன் கோஷமிட்டனர். ரயில் நிலையத்தில் பாஜகவினர் அதிகளவு வந்தனர் ஆனால் திமுகவினர் ஒரு சிலரே வந்தனர். எனவே மெஜாரிட்டி பெற்ற பாஜகவினரின்  சத்தமே ரயில் நிலையம் முழுவதும் ஒலிக்கத் தொடங்கியது. பின்னர் திமுகவினர் அமைதியாக பாஜகவினரின் பின்னால் ஓரமாக நின்றனர். 10 நிமிடங்களுக்கு மேலாக பாஜகவினரின் சத்தத்தால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.