ஆசிரியர் பணிக்கான தேர்வில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஆசிரியர் பணிக்கான தேர்வில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர்களை நியமிக்க கோரி கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆசிரியர் பணிக்கான தேர்வில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், விதிகளை வகுக்கும் வரை தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது எனவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.