பசுமை பட்டாசுக்கான புதிய ஆராய்ச்சி மையம் திறப்பு!

சிவகாசி பட்டாசு ஆலைகளில் பசுமை பட்டாசுக்கான  புதிய ஆராய்ச்சி மையத்தை மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் தொடங்கி வைத்தாா். சிவகாசி  உள்ள AAA பொறியியல் கல்லூரியில் நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின்படி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை…

சிவகாசி பட்டாசு ஆலைகளில் பசுமை பட்டாசுக்கான  புதிய ஆராய்ச்சி மையத்தை மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் தொடங்கி வைத்தாா்.

சிவகாசி  உள்ள AAA பொறியியல் கல்லூரியில் நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின்படி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசு தயாரிக்கும் வகையில் ரசாயன மூலப்பொருட்களை ஆய்வு செய்வதற்கான  ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டுள்ளது.

இதனை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் வைத்யா  ஆகியோா் திறந்து வைத்தனர்.

மேலும் இந்த ஆராய்ச்சி மையத்தில் பட்டாசு தயாரிக்கும் அனைத்து ஆலை நிர்வாகங்களும்  ரசாயன மூலப்பொருட்களை ஆய்வு செய்ய வேண்டியது கட்டாயம் என கூறப்படுகிறது.

— ரூபி

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.