மயிலாடுதுறை அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய பகுதிநேர நியாய விலைக் கடையினை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சி லட்சுமிபுரத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர். நீண்ட தூரம் சென்று நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும், உடனடியாக பகுதி நேர நியாய விலைக் கடை ஒன்று திறக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று புதிய பகுதிநேர நியாய விலைக் கடை இப்பகுதியில் அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த புதிய நியாய விலை கடையினை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். வாரம் இரண்டு நாட்கள் செயல்படும் இந்த புதிய நியாய விலை கடையினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். இதை தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
-ம.ஶ்ரீ.மரகதம்







