அரியலூர் – ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளை பொருட்கள்
கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நேற்று இரவு அரியலூர் பெரம்பலூர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் எள், கடலை, உளுந்து, கொப்பரை தேங்காய் உள்ளிட்டவைகளை விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளனர். ஆனால் அவற்றை கொள்முதல் செய்யாமல் கிடப்பில் போட்டதால், திடீரென பெய்த மழையில் விவசாய பொருட்கள் நனைந்து வீணானது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்திய ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை கண்டித்து திருச்சி- சிதம்பரம் சாலையில் மழையில் நனைந்தபடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுனர். இதற்கு தீர்வு காணும் வரை சாலை மறியல் தொடரும் என விவசாயிகள் கூறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.







