தமிழ்நாடு அரசின் சார்பில் புதிய திட்டங்கள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு துறைகளின் கீழ் புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர்…

தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு துறைகளின் கீழ் புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதேபோல, இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாம்களுக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், தேசிய பால் வள வாரியத்தின் சார்பில் நிறுவப்பட்டுள்ள 30,000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மேலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பள்ளி மற்றும் விடுதி கட்டடங்களை திறந்து வைத்து, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு புதிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அண்மைச் செய்தி: நியூட்ரினோ திட்டத்தை கைவிட அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்த வேண்டும்: முதலமைச்சர் வலியுறுத்தல்

அப்போது, தேசிய அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஊக்கத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்வில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுக்கும், Cognizant Technology Solutions நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.