தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகித குறைப்பை திரும்பப்பெற வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 4 மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, பாஜக எம்பிக்கள் பிரதமர் மோடியை வரவேற்று உற்சாக குரல் எழுப்பினர்.
இதனை தொடர்ந்து மக்களவையில் பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகித குறைப்பை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அண்மைச் செய்தி: தமிழ்நாடு அரசின் சார்பில் புதிய திட்டங்கள் – தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
8.5 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தை 8.1 சதவீதமாக குறைத்திருப்பது அபாயகரமான பிரச்னையை ஏற்படுத்தக்கூடும் என அவர் குறிப்பிட்டார். மேலும், தொழிலாளர்களின் நலன் கருதி குறைந்தபட்சமாக வருங்கால வைப்பு நிதியை 3 ஆயிரமாக ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் டி.ஆர்.பாலு கேட்டுக்கொண்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








