நாளை புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட இருக்கும் நிலையில் தமிழகத்திலிருந்து சென்ற ஆதீனத்திடம் பிரதமர் மோடி செங்கோலை பெற்றுக் கொண்டார்.
டெல்லியில் ரூ.970 கோடியில் கட்டப்பட்டுள்ள, புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, அனுராக் சிங் தாக்கூர், கிஷன் ரெட்டி ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் மோடியின் நீண்ட கால கனவு என்றும், புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழ்நாட்டு ஆதீனங்கள் வழங்கிய சோழர் காலத்து செங்கோல் வைக்கப்படும் எனவும், அதனை பிரதமர் மோடி பெற்றுக் கொள்வார் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, புதிதாக வரும் 28 ஆம் தேதி திறக்கபட உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்பட உள்ள செங்கோலின் மாதிரியை உம்மிடி பங்காரு நகை நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். அதனை பிரதமர் மோடியின் கையில் வழங்குவதற்காக, தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு, விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றது.இந்த பயணத்தில் திருவாடுத்துறை ஆதீனம், மயிலாடுதுறை தருமபுர ஆதீனம், மதுரை ஆதீனம் உள்ளிட்ட 12 பேர் சென்றனர்.
இந்நிலையில் , இதற்கிடையே டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆதினங்களைச் சந்தித்து அவர்களிடம் இருந்து செங்கோலைப் பெற்றார்.இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் உடன் இருந்தார்







