நாமக்கல்லில், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின்
மாநில பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் சிங்கராஜ் தலைமையில்
இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்,
அதன் தலைவர் சிங்கராஜ் தலைமையில் இன்று நாமக்கல்லில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கோழிப் பண்ணை உரிமையாளர்கள்,
ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், தலைவர் சிங்கராஜ்
செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மே 1 ந் தேதி முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும்
விலைக்கே, பண்ணையாளர்கள் முட்டையை விற்பனை செய்து வருகின்றனர்.
இதற்கு அனைத்து பண்ணையாளர்களும் முட்டை வியாபாரிகளும் ஒத்துழைப்பு
கொடுத்து வருகின்றனர். மேலும், ஏற்றுமதிக்கான முட்டை விலை தனியாக
நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், நாமக்கல்லில் இருந்து தினசரி 60 லட்சம் முட்டைகள், வெளிநாடுகளுக்கு
ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் வெளிநாடுகளுக்கு அதிகளவில்
முட்டை ஏற்றுமதி ஆக வாய்ப்பு உள்ளது என்றனர். நாமக்கல் மண்டலத்தில் 1100
கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி சுமார் 5 கோடிக்கு
அதிகமான முட்டைகள் உற்பத்தி ஆகிறது என கூறினார்.
மேலும், கோடை வெயில் தாக்கம் காரணமாக தற்போது 10 சதவீதம் முட்டை
உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது முட்டை ஒன்றின் பண்ணைக்
கொள்முதல் விலை ரூபாய் 4.75 ஆக உள்ளது. வரும் நாட்களில் முட்டை விலை
மேலும் உயர வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.
கு. பாலமுருகன்







