தமிழ்நாடு மாநில காட்டுயிர் வாரியத்திற்கு புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு வனத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 ன் கீழ் வன விலங்குகளுக்கான தமிழ்நாடு மாநில காட்டுயிர் வாரியத்திற்கு புதிய உறுப்பினர்கள் நியமித்து தமிழ்நாடு வனத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த குழுவின் தலைவராக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இருப்பார். துணைத்தலைவராக தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் செயல்படுவார்.
சட்டமன்ற உறுப்பினர்களாக உதயசூரியன், செந்தில்குமார், ராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர தலைமை செயலாளர், வனத்துறை முதன்மை செயலாளர் மற்றும் பல்துறை வல்லுநர்களாக ஓசை காளிதாசன், சி.பி.ராஜ்குமார், சாவித்ரி, பூமிநாதன், தங்கபாண்டி உள்ளிட்டோர் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.உத்தியோகபூர்வ உறுப்பினர்களைத் தவிர மற்ற உறுப்பினர்களின் பதவிக் காலம். இரண்டு ஆண்டுகள் என்று தமிழ்நாடு வனத்துறை அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
வனவிலங்குகள் மற்றும் குறிப்பிட்ட தாவரங்களின் பாதுகாப்புகளை உறுதி செய்வதும், அதற்கான கொள்கைகளை உருவாக்குதலும், பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டிய இடங்களை தேர்வு செய்வதும் மற்றும் பழங்குடியின மக்களின் தேவைகளுக்கு ஏர்ப்ப நடவடிக்கைகள் எடுப்பதும் இந்த குழுவின் முக்கிய பணிகளாகும்.
– சத்யா விஸ்வநாதன், மாணவ ஊடகவியலாளர்







