வரும் 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதிக்குள் மற்றொரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்க கடலில் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தென்மேற்கு வங்க கடலை நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகர்கிறது. வடமேற்கு திசையில் தமிழகம் புதுவை கடற்கரையை நோக்கி நகர்ந்து பின்னர் தமிழகம் புதுவை மற்றும் கேரளாவை நோக்கி நகரும்.
தற்போதைய வானிலை முன் கணிப்புகளின் அடிப்படையில் வட தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்கள் மிக கனமழையை எதிர்நோக்கி உள்ளது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை முதல் 13ம் தேதி வரை தமிழகம் புதுவை மற்றும் கேரளாவை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 16ம் தேதி முதல் 23ம் தேதிக்குள் மற்றொரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்க கடலில் உருவாகும் எனவும், அடுத்த சில நாட்களில் தென்மேற்கு வங்க கடலில் மேலும் ஒரு புதிய் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் தற்போது நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் 16ம் தேதி வாக்கில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்க கடலில் உருவாகும் நிலையில் தமிழகம் கேரளா மற்றும் புதுவையில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
“சரியான பொறுப்புகளில் நேர்மையானவர்கள்”: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தல்