புதிய இந்தியாவை இளைஞர்கள் உருவாக்க வேண்டும்- ஆளுநர் ஆர்.என்.ரவி

புதிய  இந்தியாவை இளைஞர்கள் தான் உருவாக்க வேண்டும் என மதுரை காமாராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.  மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் கடந்த 2019-20 மற்றும் 2020-21 ஆகிய இரண்டு கல்வி…

புதிய  இந்தியாவை இளைஞர்கள் தான் உருவாக்க வேண்டும் என மதுரை காமாராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். 

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் கடந்த 2019-20 மற்றும் 2020-21 ஆகிய இரண்டு கல்வி ஆண்டுகளுக்கான பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவியும், கௌரவ விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றும் போது, அனைவருக்கும் வணக்கம்… பட்ட பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் என தமிழில் வாழ்த்து தெரிவித்து, இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும். பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், உங்களுடைய கடுமையான முயற்சியால் தான் பட்டம் கிடைத்துள்ளது. உங்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக கல்வி கட்டமைப்பை உருவாக்கியவர் காமராஜர். தொழிற்சாலைகள் உருவாக்கியவர், சென்னை ஐ ஐ டி யை உருவாக்கியவர். அவரை நினைப்பதில் பெருமை கொள்கிறேன். இன்றிருக்கும் அனைத்து கல்வி, தொழிற்சாலை கட்டமைப்புகளும் காரமராஜரால் உருவாக்கப்பட்டவை என்றார்.

மேலும், தற்போது வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எல்லோரும் சென்ற பாதையில் செல்லாமல், புதிதாக தொழில் துவங்க மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும். இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் 100வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. அப்போது புதிய சாதனைகளை படைக்க நாம் உழைக்க வேண்டும். புதிய இந்தியாவை இளைஞர்கள் தான் உருவாக்க வேண்டும். இந்தியாவை ஒரே குடும்பமாக பார்க்க வேண்டும். பல பிரிவுகளாக பார்க்கக் கூடாது. 8 ஆண்டுகளில் பல்வேறு தளங்களிலும், துறைகளிலும் இந்தியா முன்னேறி உள்ளது என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.