முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியாவில் குடியரசுத்தலைவர்களாக இருந்தவர்கள் யார்?..யார்..?

இந்திய நாட்டின் பதினைந்தாவது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18 அன்று நடைபெற உள்ளது. ஆளும் பாஜக சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். வெற்றி பெறுபவர் யார் என்பது 23-ஆம் தேதி தெரியும். இதுவரை குடியரசுத் தலைவர்களாக இருந்தவர்களை குறித்து காணலாம்..

 

பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்த இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று, விடுதலை அடைந்தது. இந்தியாவிற்காக தனியாக அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.1950-ம் ஆண்டு.ஜனவரி.26 ஆம் தேதி இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.அதுவரை கவர்னர் ஜெனரலாக இருந்த பதவி . குடியரசுத்தலைவர் ஆக உருமாற்றம் பெற்றது. அத்துடன் சட்டமியற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகள், மாநில சட்டபேரவைகள், சட்டத்தை கண்காணிக்கும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், முப்படைகள், ரிசர்வ் வங்கி போன்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளின் பாதுகாவலராகவும், நாட்டின் முதற் குடிமகனாகவும் குடியரசுத்தலைவர் செயல்படுவார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். சட்ட பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பர். இவருக்கு துணையாக குடியரசுத்துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பர். இதுவரை பதினான்கு பேர் குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1950 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரை, தொடர்ந்து இரண்டு முறை இப்பதவியை அலங்கரித்தவர். உப்பு சத்தியாகிரகம் நடைபெற்ற போது, அதில் பங்கேற்று சிறை சென்றவர்.அரசியலமைப்பை உருவாக்கும் குழுவின் தலைவர். 1962-இல் “பாரத ரத்னா” பட்டம் பெற்றார்.

 

ராஜேந்திர பிரசாத்துக்கு பின், நாட்டின் இரண்டாவது குடியரசு தலைவராக கல்வியாளரும், தத்துவ ஞானியுமான பேராசிரியர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். சோவியத் யூனியனில் இந்தியத் தூதராக இருந்தார் . 1962-67 ஆம் ஆண்டுகளில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார், பாரத ரத்னா’ விருதை முதன்முதலில் வழங்கத் தீர்மானித்தபோது, 1954-இல் பெற்றவர். தமிழ்நாட்டின் திருத்தணியில் பிறந்தவர். கல்வியின் மூலம் உச்சம் தொட்டவர். ராதாகிருஷ்ணன்.

 

1967 ஆம் ஆண்டு, மூன்றாவது குடியரசுத் தலைவராக கல்வியாளர், பேராசிரியர், அலிகார் பல்கலைக்கழக துணை வேந்தர் என பன்முகம் கொண்ட தேசபக்தர் .. டாக்டர் ஜாகீர் உசேன்.தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவி முடியும் முன்பே 1969 ஆம் ஆண்டு காலமானார். 1963-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்றார். குடியரசுத் தலைவர் பதவியில் அமர்ந்த முதல் இஸ்லாமியர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

 

குடியரசு தலைவராக இருந்த ஜாகிர் உசேனின் திடீர் மறைவையடுத்து, 1969 ஆம் ஆண்டு , நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில், பிரதமர் இந்திராகாந்தி, திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட வி.வி.கிரி. காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் நீலம் சஞ்சீவி ரெட்டியை வென்று, நான்காவது குடியரசுத் தலைவர் ஆனார்.. இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் 1969-இல் தற்காலிக குடியரசுத் தலைவராக இருந்த பெருமையும் இவருக்கு உண்டு.

 

1974 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில், மத்திய அமைச்சர், பல்துறை நிபுணர் என பெயரெடுத்த பக்ருதீன் அலி அகமது நாட்டின் ஐந்தாவது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1975 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா கொண்டு வந்த மிசா எனப்படும், அவசர நிலை சட்டத்தை அமல்படுத்தினார். பதவியில் இருந்த போதே 1977 ஆம் ஆண்டு காலமானார்.

 

பக்ரூதின் அலி அகமது மறைவையடுத்து, 1977 ஆம் ஆண்டு, ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்பு நூலிழையில் வெற்றியை தவற விட்டவருமான நீலம் சஞ்சீவி ரெட்டி ,இம்முறை நாட்டின் ஆறாவது குடியரசுத் தலைவராக வென்றார். (எந்த இந்திரா காந்தி இவரை குடியரசு தலைவர் தேர்தலில் தோற்க வைத்தாரோ, அதே இந்திரா காந்திக்கு 1980 ஆம் ஆண்டு பிரதமராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். ) இவர் காலத்தில் மொரார்ஜி தேசாய், சரண் சிங், இந்திரா காந்தி ஆகியோர் பிரதமராக இருந்தனர்.

 

1982 ஆம் ஆண்டு ஏழாவது குடியரசுத் தலைவராக கியானி ஜெயில் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பதவிக்கு வந்த முதல் சீக்கியர். ((“கியானி’ என்றால் முழுவதும் கற்றவர் என்று பொருள். சீக்கிய மத நூல்களில் விற்பன்னர்.)) பஞ்சாப் முதலமைச்சர், மத்திய அமைச்சர் பதவிகளில் இருந்தார். இவரது பதவிக்காலத்தில் தான் அமிர்தசரஸ் பொற்கோயிலில் ராணுவம், தில்லியில் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை போன்றவை நிகழ்ந்தன. இதனால் இந்திரா காந்தியுடனும், ராஜீவ் காந்தியுடனும் மறைமுக பனிப்போரை நடத்தினார்.

 

1987 ஆம் ஆண்டு எட்டாவது குடியரசுத் தலைவராக ஆர்.வெங்கட்ராமன் தேர்வானார். குடியரசு துணைத்தலைவர், மத்திய, மாநில அமைச்சர் பதவிகளை வகித்த சிறந்த நிர்வாகி ஆர்.வெங்கட்ராமன், ராஜீவ் காந்தி வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்மராவ் என நான்கு பிரதமர்களைக் கண்டவர். பின்னர் சங்கர் தயாள் சர்மா நாட்டின் 9-ஆவது குடியரசுத் தலைவராக , 1992 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பேராசிரியர் ,போபால் மாகாண முதல்வர், மத்திய அமைச்சர், குடியரசு துணைத்தலைவர் பதவிகளை அலங்கரித்தவர். ஓமன் நாட்டுக்கு சர்மா சென்றபோது, அந்த நாட்டு மன்னர் விமான நிலையத்திற்கு நேரடியாக வந்து, வரவேற்றார். அதற்கு அவர் நான் சர்மா வின் மாணவன் என நெகிழ்ந்தார்.

பத்தாவது குடியரசுத் தலைவராக 1997 ஆம் ஆண்டு,கே.ஆர்.நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெளியுறவு துறை அலுவலர், மத்திய அமைச்சர், குடியரசு துணைத்தலைவராகவும் இருந்துள்ளார். குடியரசுத் தலைவர் பதவியில் அமர்ந்த முதல் கேரள மாநிலத்தவர் மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை கொண்டவர். 2002 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டை சேர்ந்த அணு விஞ்ஞானி யான அப்துல் கலாம் 11-ஆவது குடியரசுத் தலைவரானார். தேசிய ஜனநாயக கூட்டணியால் நிறுத்தப்பட்டாலும், காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆதரவுடன் குடியரசு தலைவர் மாளிகையில் அமர்ந்த முதல் அறிவியல் அறிஞர்.

 

2007 ஆம் ஆண்டு 12-ஆவது குடியரசுத் தலைவராக பிரதிபா பாட்டீல் தேர்வானார். இப்பதவியை வகித்த முதல் பெண் இவர். ராஜஸ்தான் ஆளுநர், மகாராஷ்டிரா மாநில அமைச்சர், மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இரண்டு முறை பிரதமர் பதவி கைநழுவினாலும், 2012 ஆம் ஆண்டு நாட்டின் 13 வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் பிரணாப் முகர்ஜி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான முகர்ஜி, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் அரசுகளில் நிதி, வெளிவிவகாரத் துறை, பாதுகாப்புத் துறை என பல முக்கியத் துறைகளில் அமைச்சராக இருந்தார்.

 

2017 ஆம் ஆண்டு ,14-ஆவது குடியரசுத் தலைவராக ராம் நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசத்தில் இருந்து குடியரசு தலைவரான முதல் நபர் ராம் நாத் கோவிந்த் , பீகார் ஆளுநர், மாநிலங்களவை எம்.பியாகவும் இருந்துள்ளார். இந்நிலையில், 15 வது குடியரசு தலைவராக வெல்வது பாஜகவின் திரவுபதி முர்முவா? எதிர்க்கட்சிகளின் யஷ்வந்த் சின்ஹா வா? என்பது வரும் வாரங்களில் தெரிந்து விடும்.

 

ரா.தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

துபாய்க்கு பணத்தை எடுத்து வந்தேனா? முதலமைச்சர்

EZHILARASAN D

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்

Halley Karthik

உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

EZHILARASAN D