மாநிலத்தில் புதிதாக உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளை நேரடியாக தொடங்க முடியாது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மாநிலம் முழுவதும் உள்ள நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் அவ்வப்போது தேவைக்கேற்ப அரசு தரம் உயர்த்தி வருகிறது என்று தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேரடியாக புதிய உயர்நிலைப் பள்ளியோ, மேல்நிலைப் பள்ளியோ துவங்கும் நடைமுறை 1996-ம் ஆண்டிலேயே கைவிடப்பட்டதாகவும், மாநிலத்தில் உள்ள தேவை, சூழலுக்கேற்ப பள்ளிகளை தரம் உயர்த்துவது பற்றி நிதித்துறையுடன் ஆலோசித்து, அரசின் நெறிமுறைகளின் படி முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.