“உத்தரப் பிரதேசத்தின் புதிய அத்தியாயம்”- பிரதமர் மோடி

341 கி.மீ தொலைவு விரைவு சாலையானது உத்தரப் பிரதேசத்தின் புதிய அத்தியாயம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் 341 கி.மீ தொலைவு கொண்ட புதிய “பூர்வாஞ்சல் விரைவுச்சாலையை” இன்று (நவ.16) பிரதமர்…

341 கி.மீ தொலைவு விரைவு சாலையானது உத்தரப் பிரதேசத்தின் புதிய அத்தியாயம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் 341 கி.மீ தொலைவு கொண்ட புதிய “பூர்வாஞ்சல் விரைவுச்சாலையை” இன்று (நவ.16) பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், 341 கி.மீ தொலைவு விரைவு சாலையானது உத்தரப் பிரதேசத்தின் புதிய அத்தியாயம் என்று குறிப்பிட்டார்.

மேலும், “உத்தரப் பிரதேச மாநிலத்தின் திறன்களை சந்தேகிக்கின்றவர்கள் பூர்வாஞ்சல் விரைவுச்சாலை வந்து பார்க்க வேண்டும். இது மாநிலத்தின் வலிமையை பறைசாற்றுகிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் இது வெறும் நிலமாக இருந்தது. கிழக்கு பிராந்தியங்களில் வளர்ச்சி திட்டங்களை கடந்த கால அரசுகள் புறக்கணித்தன.” என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,

“பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் உள்ள விமான ஓடுபாதை நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரில் உள்ள சௌத்சராய் கிராமத்தில் தொடங்கும் இந்த விரைவு சாலையானது, 341 கி.மீ நீளத்தை கொண்டுள்ளது. மேலும், 3.2 கி.மீ தொலைவுக்கு விமான ஓடுதளத்தையும் கொண்டுள்ளது. இதன் மூலம் அவசர காலங்களில் போர் விமானங்களை தரையிறக்க இது பயன்படும்.

6 வழிச்சாலையாக கட்டமைக்கப்பட்டுள்ள இது பின்வரும் காலங்களில் 8 வழிச்சாலையாக விரிவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.