திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு, புதிய தேர் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், வினா – விடை நேரத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா, வேளச்சேரி தொகுதியில் உள்ள திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருத்தேரை புனரமைக்க அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு ரூ.6 கோடி செலவில் அமைக்கப்பட்ட தங்கத்தேர் நல்ல நிலையில் உள்ளதாகவும், ஏற்கனவே 35 அடி உயர சுப்பிரமணிய திருத்தேர் பயன்பாட்டில் உள்ளதாகவும்,
மேலும் ரூ.1.6 கோடி மதிப்பீட்டில் 45 அடி உயரம், 16 அடி அகலம் கொண்ட புதிய தேர் அமைப்பதற்கு மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் அனுமதிக் கடிதமும் பெறப்பட்டுள்ளதால் புதிய தேர் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
Advertisement: