செய்திகள்

எதிர்ப்புகளுக்கு மத்தியில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, 25 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் முன்பே அதற்கு கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஆரணி எம்.பி விஷ்ணு பிரசாத் இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் சத்தியமூர்த்தி பவனில் உண்ணா விரதத்தில் ஈடுபட்டார். கரூர் எம்.பி ஜோதிமணி உள்ளிட்டோர் பணம் உள்ளவர்களுக்குத்தான் சீட் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

அதன்படி

ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதி தமிழ்நாடு காங்கிரஸ் பட்டியலின தலைவர் செல்வப்பெருந்தகைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பொன்னேரி (தனி) தொகுதியில் துரை சந்திரசேகர் போட்டியிடுகிறார்.

சோளிங்கர் தொகுதியில் ஏ.எம்.முனிரத்னமும்,

ஊத்தங்கரை (தனி) தொகுதியில் ஏ.எஸ்.ஆறுமுகமும் போட்டியிடுகிறார்கள்.

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் கே.ஐ.மணிரத்னம் போட்டியிடுகிறார்.

ஓமலூர் தொகுதியில் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம்,

ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈவேராவும்,

அறந்தாங்கியில் எஸ்.டி.ராமச்சந்திரனும்,

கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கும் போட்டியிடுகிறார்கள்.

உதகமண்டலம் ஆர்.கணேஷ்,

உடுமலைப் பேட்டை தென்னரசு,

விருத்தாச்சலம் தொகுதியில் ராதாகிருஷ்ணன்,

காரைக்குடி தொகுதியில் மங்குடி,

மேலூரில் டி.ரவிச்சந்திரன்,

ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி) தொகுதியில் மாதவன் ராவ்,

சிவகாசியில் அசோகன், திருவாடனையில் கருமாணிக்கும் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஊர்வசி அமிர்தராஜ்,

தென்காசியில் பழனி நாடார், நாங்குநேரியில் ரூபி மனோகரன், கிள்ளியூரில் ராஜேஷ்குமாரும் போட்டியிடுகிறார்கள்.

வேளச்சேரி, குளச்சல், விளவங்கோடு, மயிலாடுதுறைக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா, திருநாவுக்கரசர் மகன் எஸ்.டி.ராமச்சந்திரன் ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோலவே கே.ஆர்.இராமசாமி மகனுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 21 வேட்பாளர்களில் 18 வேட்பாளர்கள் நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட பட்டியலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 2,205 பேருக்கு கொரோனா: 46 பேர் உயிரிழப்பு

Gayathri Venkatesan

அதிமுகவில் இருந்து நிலோபர் கபில் நீக்கப்பட்டது ஏன்?

Halley Karthik

ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Halley Karthik