முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

’என்னால பார்க்க முடியலைனா கூட..’ விரட்டும் த்ரில்லரில் மிரட்டும் நயன்தாரா

நயன்தாரா நடித்துள்ள ’நெற்றிக்கண்’ படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நெற்றிக்கண்’. ‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். ‘Blind’ என்ற கொரியப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இந்தப் படத்தில் நயன்தாரா, பார்வையற்றவராக நடித்துள்ளார்.

அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் கடந்த வருடமே வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ’நெற்றிக் கண்’, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது.

பயங்கர த்ரில்லர் படமான இதில், வில்லனை விரட்டும் நயன்தாராவின் மிரட்டும் நடிப்பு ரசிகர்களை ஈர்த்துள்ளது. ’என்னால பார்க்க முடியலைனா கூட நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்க முடியும்’ என்று நயன்தாரா பேசும் வசனம் உட்பட இந்த டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப்படம் ஆகஸ்ட் 13ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Advertisement:
SHARE

Related posts

நான்கு மாதங்களுக்கு பிறகு மரக்கூண்டிலிருந்து வெளியே வந்துள்ளது காட்டு யானை சங்கர்

Vandhana

கல்லூரி திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Saravana Kumar

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!

Saravana Kumar