நீட் தேர்வு முறைகேடு – தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட மனுக்களுக்கு தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளில் மாணவ,  மாணவிகள் சேர உதவும் நீட் தேர்வு கடந்த…

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட மனுக்களுக்கு தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் மாணவ,  மாணவிகள் சேர உதவும் நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது.  நீட் தேர்வு நடைபெற்ற தினத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாகவும்,  ஆள்மாறாட்டம் நடந்ததாகவும் புகார் எழுந்தது.  ஆனால், இதை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மறுத்திருந்தது.

இதனிடையே,  இம்மாத தொடக்கத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின.  இதில் ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் படித்த 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்றதும் 1, 563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்ததோடு அவர்களுக்கு 23-ம் தேதி மறு தேர்வு நடத்துவதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள் : உயிர் பலி வாங்கும் மெத்தனால்…. குடித்தால் என்ன நடக்கும்?

இந்நிலையில், நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி விக்ரம்நாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  நீட் தேர்வு காலதாமதத்தால் பாதிக்கப்பட்ட சில மாணவர்கள் தங்களையும் மறு தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என இந்திய அரசு மற்றும் தேசிய தேர்வுகள் முகமை பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  மேலும், நீட் தேர்வு தொடர்பாக உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் மீதான விசாரணைக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

1. இந்தியா முழுவதும் ஒன்றிணைக்கப்பட்ட மாணவர்கள் மெரிட் பட்டியலையும்,  நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியலையும் வெளிப்படையாக பொதுவெளியில்வெளியிட வேண்டும்.

2. தற்போது மறுதேர்வு எழுத உள்ள 1563 மாணவர்கள் பட்டியலையும் வெளியிட வேண்டும். நீட் தேர்வு மீதான நம்பகத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளதால்,  வெளிப்படைத்தன்மை பின்பற்ற தேசிய தேர்வு முகாமைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

3. நீட் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஏற்கனவே உள்ள இரு உயர்மட்டக் குழுக்கள் தவிர நீதிபதிகளை உள்ளடக்கிய சுதந்திரமான விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்.

இந்த மனுக்கள் அனைத்திலும் பதிலளிக்க தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.