ஈரோடு மாவட்டம் சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம் குறித்து 6 மருத்துவமனையில் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் ஹீமோகுளோபினோபதி திட்ட விரிவாக்க மற்றும் இரு வார கால தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் திட்டம் தொடக்கவிழா நடந்தது. இதனை தமிழ்நாடு மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணணூண்ணி மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமி கருமுட்டை விவகாரம் குறித்து தமிழ்நாட்டில் 4 மருத்துவமனையும், திருவனந்தபுரத்தில் ஒரு மருத்துவமனையும், ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கும் துறை சம்பந்தபட்ட செயலாளருக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட விதிமுறைகள், கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அவர்கள் மீது எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிக்கை அனுப்பப்பட உள்ளது என தெரிவித்தார். தாளவாடி ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை மேம்படுத்தபட்ட அரசு மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.