நீட் தேர்வு பாதிப்பை ஆராய அமைக்கப்பட்ட குழு: 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருத்து!

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு…

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. அந்தக் குழு மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரிடம் நீட் தேர்வு குறித்து கருத்துக்களை பதிவு செய்ய கேட்டுக்கொண்டிருந்தது. பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய நேற்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள்
கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

பொதுமக்களின் கருத்துக்கள் தொடர்பாக வரும் 28-ம் தேதி நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.