முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

எனது சாதனையை நானே முறியடித்துள்ளேன்: பிரதமர் மோடி பெருமிதம்

தமிழகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 11 மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக இன்று திறந்து வைத்தார். மருத்துவக்கல்லூரிகளுடன், சென்னையில் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என தமிழில் பேசி தனது உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியாவில் 2014-ஆம் ஆண்டில் 317ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 597ஆக உயர்ந்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாட்டின் மருத்துவக்கல்லூரி எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் 9 மருத்துவக் கல்லூரிகள் திறந்தது சாதனையாக இருந்தது தற்போது தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரியை திறந்து இருப்பது என்னுடைய சாதனையை தானே முறியடித்து கொள்வதாக தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையில் உலகத்தின் மிகப்பழமையான மொழியான தமிழில் சில நிமிடங்கள் பேச வாய்ப்பு கிடைத்தது எனது வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாக அமைந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளில் இந்தியா வருபவர்களுக்குத் தேவையான வசதிகள் உள்ளதாகவும், தமிழ் சார்ந்த படிப்புகளில் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம் முக்கியப்பங்கு வகிக்கும் எனவும், தேசியக் கல்விக் கொள்கையில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு தொடர்பான அனைத்து வழிமுறைகளையும் மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை கொளத்தூரில் ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Jeba Arul Robinson

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு

கடைசி டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்

Halley Karthik