நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி முன்னிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
ரூ.31,500 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்தார். அவருடன் ஒரே மேடையில் முதலமைச்சர் ஸ்டாலினும் இருந்தார்.
அப்போது, பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சாலை கட்டமைப்பை மேம்படுத்த உங்களோடு பணியாற்ற முனைப்பாக இருக்கிறோம். மத்திய, மாநில அரசு இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் ஒன்றிய அரசின் பங்களிப்பு தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், “மீனவ சமுதாய மக்களுக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுக்க, உரிமையை நிலைநாட்ட உகந்த தருணம் என நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும். நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் அனுமதியை விரைந்து வழங்க வேண்டும்” என்று பிரதமருக்கு மேடையிலேயே கோரிக்கை வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.







