தமிழ்நாடு- புதுச்சேரி எல்லைப்பகுதியான பட்டானூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் இருந்து புதுச்சேரி செல்ல பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
அங்கிருந்து, புதுச்சேரி செல்ல பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலையில், இதனை பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







