விவசாயி கழுத்தறுத்து கொலை

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயியை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் தெற்குக் காடு பகுதியை சேர்ந்தவர் ரவி. அவருக்கு…

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயியை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் தெற்குக் காடு பகுதியை சேர்ந்தவர் ரவி. அவருக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று சுமார் 12 மணி அளவில் பைக்கில் கடைவீதிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் அவரை வழிமறித்து கத்தியால் குத்தி, கழுத்தை அறுத்துவிட்டு தப்பி சென்றனர். இதைகண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.