முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்தார் சரத்பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், பிரதமர் மோடியை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் புதிய அணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக, சரத்பவார் தலைமையில் புதிய அணி உருவாக இருப்பதாகக் கூறப்பட்டது. பிரசாந்த் கிஷோரை அவர் சந்தித்ததை அடுத்து இந்த பேச்சு பரபரப்பாக எழுந்தது.

இதற்கிடையே, குடியரசு தலைவர் பதவிக்கு, எதிர்க்கட்சிகள் சரத்பவாரை களமிறக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட, சரத்பவார் திட்டமிடவில்லை என தேசியவாத காங்கிரஸ் தெரிவித் திருந்தது. சரத்பவாரும் அதை மறுத்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடியை, சரத்பவார் இன்று திடீரென சந்தித்தார். பிரதமர் மோடியின் வீட்டில் இந்த சந்திப்பு, 50 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், பிரதமர் மோடியை சரத்பவார் சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமரை சரத்பவார் திடீரென சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள சரத்பவார், நாட்டின் நலன் தொடர்பாக சில விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

நாளை வானில் தோன்றும் ‘ரத்த நிலவு’

இந்தியாவின் இளம் வயது பெண் விமானி ஆயிஷா அசிஸ்!

Jeba Arul Robinson

அரசு மருத்துவர்களை பாராட்டி பள்ளி மாணவர்கள் வெளிப்படுத்திய அன்பு

Gayathri Venkatesan