என்.சி.எல் 2023 கிரிக்கெட் தொடரில், தியாகராசர் பொறியியல் கல்லூரியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சவுராஷ்ட்ரா கல்லூரி அணி அபார வெற்றி பெற்றது.
செய்தித் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக, நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளுக்கு இடையேயான NCL 2023 (NEWS 7 TAMIL CRICKET LEAGUE 2023) T20 கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடர் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோவை, திருச்சி, மதுரை மற்றும் நெல்லை ஆகிய 4 மண்டலங்களில் இருந்து தலா 8 அணிகள் வீதம் 32 அணிகள் இந்த டி-20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில், மதுரையை அடுத்த பொட்டப்பாளையத்தில் உள்ள கே.எல்.என். பொறியியல் கல்லூரி மைதானத்தில், மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி மற்றும்
மதுரை சவுராஷ்டிரா கலை & அறிவியல் கல்லூரி மோதின. இதில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா கல்லூரி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையும் படியுங்கள் : +2 பொதுத்தேர்வில் 100/100 எடுத்தால் ரூ.10,000 பரிசு – சென்னை மேயர் பிரியா அறிவிப்பு
அதன்படி முதலில் களமிறங்கிய சவுராஷ்டிரா கல்லூரி, 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்களை இழந்து, 192 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சவுராஷ்டிரா கல்லூரியின் சந்தோஷ் 54 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தியாகராசர் பொறியியல் கல்லூரி, 17 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சவுராஷ்டிரா கல்லூரி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சவுராஷ்டிரா கல்லூரியின் சந்தோஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.