முக்கியச் செய்திகள் தமிழகம் விளையாட்டு

NCL 2023 : பொள்ளாச்சி PA பொறியியல் கல்லூரியை வீழ்த்தி கோவை சுகுணா கல்லூரி த்ரில் வெற்றி!!

என்.சி.எல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில், பொள்ளாச்சி PA பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோவை சுகுணா பொறியியல் கல்லூரி அணி வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

செய்தித் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக, நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளுக்கு இடையேயான NCL 2023 (NEWS 7 TAMIL CRICKET LEAGUE 2023) T20 கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடர் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோவை, திருச்சி, மதுரை மற்றும் நெல்லை ஆகிய 4 மண்டலங்களில் இருந்து தலா 8 அணிகள் வீதம் 32 அணிகள் இந்த டி-20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படியுங்கள் : NCL 2023 : தியாகராசர் பொறியியல் கல்லூரியை வீழ்த்தி சவுராஷ்ட்ரா கல்லூரி அபார வெற்றி

அந்த வகையில், கோவை சுகுணா பொறியியல் கல்லூரி, பொள்ளாச்சி PA பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியுடன் இன்று மோதியது. இதில் டாஸ் வென்ற சுகுணா கல்லூரி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய PA பொறியியல் கல்லூரி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 114 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக PA பொறியியல் கல்லூரியின் ஹரீஷ் 34 பந்துகளில் 45 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சுகுணா கல்லூரி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக 28 பந்துகளில் 37 ரன்கள் விளாசிய சுகுணா கல்லூரி மாணவர் நவீன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை

Arivazhagan Chinnasamy

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குக் கால அவகாசம்

Halley Karthik

ஓடும் ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது

Web Editor