NCL 2023 : அதிரடி காட்டிய மதர் தெரசா பொறியியல் கல்லூரி; 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தல்

என்.சி.எல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில், மதர் தெரசா பொறியியல் கல்லூரி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்கேட் பொறியியல் கல்லூரி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. செய்தித் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக, நியூஸ்7…

என்.சி.எல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில், மதர் தெரசா பொறியியல் கல்லூரி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்கேட் பொறியியல் கல்லூரி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

செய்தித் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக, நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளுக்கு இடையேயான NCL 2023 (NEWS 7 TAMIL CRICKET LEAGUE 2023) டி20 கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடர் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோவை, திருச்சி, மதுரை மற்றும் நெல்லை ஆகிய 4 மண்டலங்களில் இருந்து தலா 8 அணிகள் வீதம் 32 அணிகள் இந்த டி-20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதையும் படியுங்கள் : NCL 2023 : கற்பகம் பல்கலைக்கழகத்தை வீழ்த்தி ஶ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வெற்றி

அந்த வகையில், நெல்லை மண்டலத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில், மதர் தெரசா பொறியியல் கல்லூரி அணியும், ஸ்கேட் பொறியியல் கல்லூரி அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்கேட் பொறியியல் கல்லூரி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ஸ்கேட் பொறியியல் கல்லூரி, 12.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 64 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 65 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மதர் தெரசா பொறியியல் கல்லூரி விக்கெட் இழப்பின்றி 5.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அசத்தியது.

இதன்மூலம் 10 விக்கெட் வித்தியாசத்தில் மதர் தெரசா பொறியியல் கல்லூரி அணி அபார வெற்றி பெற்றது. 36 ரன்கள் எடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்திய மதர் தெரசா பொறியியல் கல்லூரியின் சஜன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.