முக்கியச் செய்திகள் தமிழகம்

பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா; அரசு சார்பில் சிறப்பாக நடத்தப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சார்பில்  சிறப்பாக நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்திய சமூக நீதி போராட்ட வரலாற்றில் 100 ஆண்டுகளுக்கு முன் கேரளாவின் வைக்கத்தில் நடைபெற்ற போராட்டம் மிக முதன்மையானது. பெரியார் பங்கேற்று நடத்திய இந்தப் போராட்டம், பெரியாரின் சமூக நீதிப் பார்வையில் முக்கியப் பங்கு வகித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆங்கிலேயர் ஆட்சியில் கேரளாவின் வைக்கம் என்ற ஊரில் கோவிலை சுற்றிய தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடமாட தடை இருந்தது. இதை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் மார்ச் 30 அன்று முன்னெடுக்கப்பட்டது. 924-ம் ஆண்டு மார்ச் 30-ந் தேதி தொடங்கிய போராட்டம் நவம்பர் 23  1925  வரை இந்த போராட்டம்  நிகழ்த்தப்பட்டது.

இந்நிலையில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா தமிழ்நாட்டில் ஓராண்டுக்கு கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று  சட்டப்பேரவையில் பல அறிவிப்புகளை வெளியிட்ரார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், அந்த அறிவிப்புகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், ’ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம் மண்ணில் திணிக்கப்பட்ட சனாதனக் கொடுமைகளில் இருந்து நாம் மீண்டெழ அடித்தளமிட்ட வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு! தேளின் விஷத்தைத் தேன் என விற்பனை செய்பவர்களிடம் இருந்து இந்த சமூகத்தைக் காக்க சுயமரியாதை அருமருந்தைக் கொடுத்த தந்தை பெரியாரைப் போற்றுவோம்!’ என குறிப்பிட்டு வீடியோவையும் இணைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க திமுக எதிர்ப்பது ஏன்? அண்ணாமலை

G SaravanaKumar

பி.எம்.கிசான் திட்டத்தின் 11-வது தவணை விடுவிப்பு

G SaravanaKumar

சேலத்தில் பச்சிளம் குழந்தை விற்பனை… 2 பெண்கள் கைது!

Saravana