NCL 2023 : கோவை சுகுணா பொறியியல் கல்லூரியை வீழ்த்தி ரத்தினம் கல்லூரி வெற்றி

கோவையில் நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ் நடத்தும் மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் போட்டியில், கோவை ரத்தினம் கல்லூரி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி…

கோவையில் நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ் நடத்தும் மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் போட்டியில், கோவை ரத்தினம் கல்லூரி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கோவை சங்கரா கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்ற நியூஸ் 7 தமிழ் கிரிக்கெட் லீக் போட்டியில், சுகுணா பொறியியல் கல்லூரி அணியும், ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும் மோதின.

டாஸ் வென்ற கோவை சுகுணா பொறியியல் கல்லூரி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சுகுணா பொறியியல் கல்லூரி அணி மோசமான தொடக்கத்தை கொடுத்தது. அந்த அணி பவர் பிளேயில் 2 விக்கெட்டு இழப்பிற்கு 19 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியில் சுகுணா பொறியியல் கல்லூரி அணி 11 புள்ளி 5 ஓவர்களில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

கோவை ரத்தினம் கல்லூரி அணி தரப்பில் ராம் சர்மா அதிபட்சமாக 4 விக்கெட்டுகளும், நரேந்திரன் மற்றும் தினேஷ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 47 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்குடன் களமிறங்கிய ரத்தினம் கல்லூரி அணி 7 புள்ளி 1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 2 புள்ளி 5 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய கோவை ரத்தினம் கல்லூரி அணி வீரர் ராம் சர்மா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.